இந்தியாவில் தொலைக்காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 1980-ம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமாயணம் தொடர் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த தொடரில் ராமர், சீதா மற்றும் லட்சுமணன் வேடத்தில் நடித்தவர்களை மக்கள் கடவுளுக்கு இணையாகவே கருதினர். இந்த தொடர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் மீண்டும் ராமாயணம் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ராமராக நடித்தவர் அருண் கோவில். இவரை பலரும் இன்றளவும் ராமர் என்றே அழைப்பதாக அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் அருண் கோவில் தன்னுடைய குடும்பத்துடன் விமான நிலையத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் ஒரு பெண் திடீரென உணர்ச்சிவசப்பட்டு காலில் விழுந்து விட்டார். அந்தப் பெண்ணின் கணவரிடம் அருண் கோவில் என்ன இது உடனடியாக அவரை எழுந்திருக்க சொல்லுங்கள் என்று சைகை மூலம் கூறுகிறார். இதைத்தொடர்ந்து அருண் கோவில் அந்த பெண்ணின் கழுத்தின் ஒரு காவி துண்டை போட்டு அவருக்கு ஆசி வழங்கினார். அந்தப் பெண் அருண் கோவில் அங்கிருந்து நடந்து செல்லும் போது பின்னால் நின்று கையெடுத்து கும்பிடுகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
आपकी छवि क्या है औरों के हृदय में उससे ही आपकी महानता है।रामायण टीवी धारावाहिक को 35 वर्ष हो गए पर राम का चरित्र निभाने वाले अरुण गोविल आज भी सबके लिए प्रभु श्रीराम ही हैं। भावुक कर देने वाला क्षण। @arungovil12 pic.twitter.com/4nM979xQl3
— Dr Sumita Misra IAS (@sumitamisra) September 30, 2022