கள்ளக்காதலனுடன் தனியாக இருந்த பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தோர். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தனியாக சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு ரத்தோர் சென்றுள்ளார். மேலும் அந்த பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே அந்த பெண்ணுக்கும், கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த எண்ணின் கணவர் ராத்தோரை எச்சரித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இந்நிலையில் மறுநாள் அந்த பெண்ணின் கணவரின் நண்பர்கள் சிலர் அப்பெண்ணை அடித்து செருப்பு மாலை அணிவித்து நிர்வாணமாக கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர்.