Categories
தேசிய செய்திகள்

ஆண்டு வருமானம் ரூ 2,00,000 தான்… தவறாக கணக்கு காட்டிய பெண்… உண்மையில் சுவிஸ் பேங்கில் இருக்கும் தொகை எவ்வளவு?

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண்டு வருமானம் 2 லட்சம் என கூறிய நிலையில் அவரது வங்கிக் கணக்கில் 200 கோடி ரூபாய் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த தாரணி என்பவர் 2005-06 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்த சமயம் ஆண்டு வருமானம் 2 லட்சம் என்று மட்டுமே தெரிவித்தார். ஆனால் வங்கி கணக்கில் இருந்த பணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தாரணி தனக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இல்லை என தெரிவித்தார். ஆனால் ஜெனிவா வங்கி ஒன்றில் அவரது கணக்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த வங்கி கணக்கில் 196 கோடி ரூபாய் இருந்தது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் வருமானவரித்துறையினரிடம் தெரிவித்த ஆண்டு வருமானத்தை வைத்து அளவிட்டு பார்த்தால் வங்கியில் இருக்கும் பணத்தை சேர்ப்பதற்கு அவர் 11,500 வருடங்கள் வேலை செய்திருக்கவேண்டும். ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி பெரிய தொகை வங்கிக் கணக்கில் அவரால் சேர்க்க முடிந்தது என்பது பலருக்கும் தெரியாத புதிராகவே அமைந்துள்ளது. எனவே மும்பையில் அமைந்துள்ள வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் தாரணியிடம் வரி செலுத்த உத்தரவிட்டதோடு அபராதம் விதித்துள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |