கலெக்டர் அலுவலகத்தில் 3-வது மாடியிலிருந்து பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்வதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மூன்றாவது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனைப் பார்த்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் அலுவலகத்தின் மாடிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட இருந்த இளம் பெண்ணை சமாதானம் பேசி கீழே அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அப்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது தன்னுடைய கணவர் வேடியப்பன் கடந்த 2008-2009 ஆம் வருடம் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதி உள்ளார். அதில் அனைத்து தேர்வுகளிலும் அவர் தேர்ச்சியடைந்துள்ளர். ஆனால் கட்-ஆப் ரிசல்ட் வெளியாகும் போது கணவனின் பெயர் வரவில்லை என அவர் கூறியுள்ளார். அதனால் தன்னுடைய கணவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தேர்வு பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மோகனா தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மோகனா மற்றும் வேடியப்பன் ஆகிய 2 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதில் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற்றுள்ளது. அதனால் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்த நிலையில் காவல்துறையினரால் பாதுகாப்பு போடப்பட்டு இருந்துள்ளது. மேலும் பாதுகாப்பையும் மீறி இளம்பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகம் மேல் மாடிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.