உக்ரேனில் இறந்த பெண் திடீரென உயிர் பெற்ற நிலையில் தான் சொர்க்கத்தில் உள்ள இறந்து போன தந்தையை பார்த்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stryzhavka நகரைச் சேர்ந்த க்சேனியா திதுக் என்ற 83 வயது மூதாட்டியின் உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் மருத்துவர்களை வீடிற்கு அழைத்து சிகிச்சை கொடுத்தனர். தொடர் சிகிச்சையில் அவரது நாடித்துடிப்பு நின்றதால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர்.
பின்னர் 10 மணி நேர சடலமாக க்சேனியா படுக்கவைக்க பட்டிருந்த நிலையில் இறுதிச்சடங்கு செய்வதற்கு குழி தோன்றும் பணிகள் நடந்து கொண்டுருந்தது அப்போது திடீரென அவரது உடல் அசைந்தது.
அப்போது அதை பார்த்தவுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
மரணத்தை தொட்டு வந்த பின்னர் அங்கு இறந்து போன “என் தந்தையை பார்த்தேன் அவர் என்னை உள்ளே வருமாறு அழைத்தார்” ஆனால் திடீரென்று எனக்கு உயிர் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. வெள்ளை நிற உடையில் என்னை சுற்றி நிறைய பேர் இருந்தனர் அவர்கள் தேவதைகள் என நினைத்தேன் ஆனால் பின்னரே தெரிந்தது அவர்கள் மருத்துவர்கள் என கூறியுள்ளார்.
மருத்துவர் கூறுகையில்; க்சேனியா இறந்து விட்டதாக நீனைத்து அவருக்கு இறப்பு சான்றிதழ் தயார் செய்து வைத்து இருந்தோம். தற்போது அதை கிழித்து போட்டுவிட்டோம். இந்த மாதிரியான சம்பவங்களை முதல் முறை நாங்கள் சந்திக்கிறோம் இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது .
இதுகுறித்து க்சேனியாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய இருந்த பாதிரியார் கூறுகையில்; அந்த மூதாட்டிக்கு கடவுள் மீண்டும் உயிர் கொடுதுள்ளார். இதை நான் முதல் முறையாக பார்க்கிறேன் என கூறியுள்ளார்