Categories
உலக செய்திகள்

பாலியல் தொழில் செய்து வந்த பெண்… வாடிக்கையாளரிடம் வாங்கிய பணம்… ஏற்றுக்கொள்ளாத ஏடிஎம் இயந்திரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிடம் கள்ளநோட்டு கொடுத்து சென்ற வாடிக்கையாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அவரது வாடிக்கையாளர் பணம் கொடுத்துச் சென்றார். அதனை அப்பெண் ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது இயந்திரம் அப்பணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின் அப்பெண் பணத்தை உற்று நோக்கினார். வழக்கமான பணத்தை இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததை அறிந்தார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் தகவல் அளித்தார். இதனை விசாரித்த போலீசார் பெண்ணிடம் இந்த பணத்தை அளித்த நபரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரது வீட்டை சோதனையிட்டதில் அங்கு பிரிண்ட் இயந்திரம் ஒன்றும் போலி கரன்சி நோட்டுகளும் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர் ரூபாய் நோட்டுகளை தப்புத்தப்பாக அச்சடித்திருந்தார். அதனைப் பார்ப்பதற்கு சிறு பிள்ளைகள் விளையாட்டுக்கு பயன்படுத்தும் விளையாட்டு பண நோட்டுகள் போல இருந்தது. அதன்பின் போலீசார் கள்ள நோட்டு அச்சடித்த நம்பரை விசாரித்தனர்.

ஆனால் அவர் அந்தப் பெண்ணிடம் நான் பணத்தை கொடுக்கும் போது அவர் கள்ளநோட்டுகள் என்று தெரிந்தேதான் வாங்கினார் என்று தெரிவித்தார். அதன்பின் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இவர் தரப்பு வாதத்தை கேட்ட பின் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக விமர்சித்து, மோசடி, கள்ளநோட்டு அச்சடித்தல், மற்றும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Categories

Tech |