Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்… மர்ம நபர்கள் செய்த காரியம்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று நகைகளை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள வடக்கு ரத வீதியில் ராஜராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு அப்பகுதி வழியாக ராஜேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோவில் 2 மர்மநபர்கள் ராஜேஸ்வரியை பின்தொடர்ந்து சென்று அவரை ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர்.

இதனைதொடர்ந்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 5,000 ரூபாயை பறித்துக்கொண்டு போடி-தேனி சாலையில் உள்ள தீர்த்தத்தொட்டி என்னுமிடத்தில் ராஜேஸ்வரியை  இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் போடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகைகளை பறித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |