தனது காதலனை காப்பாற்ற மெக்ஸிகோவிலிருந்து சென்ற இளம்பெண் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
லிஸ்பேத் பிளோரஸ் என்ற இளம்பெண் உடைகள் அகற்றப்பட்டு, உள்ளாடைகளுடன் பிணமாக கிடந்ததால் அவர் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர் பணத்திற்காக தான் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரது சடலம் இருந்த இடம் கொள்ளை சம்பவங்களுக்கு பெயர்போன இடம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக லிஸ்பேத்தின் பற்கள் பிடுங்கப்பட்டு, தலைமுடிகள் பிடுங்கப்பட்ட நிலையில் தலையில் கல்லால் அடித்து கொலை செய்த நபர் அவரின் குடும்பத்திற்கு அறிமுகமான ப்ருளியோ ட்ரேவினோ மார்டினிஸ் என்பவரே.
லிஸ்பேத்திடம் அவரது காதலரை மெக்சிகோவில் கடத்தி வைத்திருப்பதாகவும் பணம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் எனவும் கூறி ஏமாற்றி அவரை மெக்சிகோவிற்கு வரவழைத்துள்ளார். அதன்பின் அவரை கொலை செய்துவிட்டு அவரிடமிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார். அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 12 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தாக்கியதாக சிறை சென்றது பாலியல் குற்றங்களின் பட்டியலில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.