பிரான்சில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் ஆபாச படம் கேட்ட காவல் அதிகாரியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பிரான்ஸ் ரூவன் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றார். அங்கு அவர் ஒரு போலீஸ் அதிகாரியிடம் கலந்துரையாடி தனது புகாரை தெரிவித்தார். சில நாட்களுக்குப் பின்னர் அந்த போலீஸ்காரர் புகார் அளிக்கப் வந்த பெண்ணுடன் தனியாக தொடர்புகொண்டு பேசி வந்தார்.
இந்நிலையில், போலீஸ்காரர் அந்தப் பெண்ணை தனது அறையில் நிர்வாணமாக நின்று புகைப்படம் ஒன்றை எடுத்து அனுப்பும் படி கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து அந்த போலீஸ்காரர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.