Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பாலியல் தொந்தரவு செய்கிறார்”… நடவடிக்கை எடுங்க… விசைத்தறி உரிமையாளர் மீது தொழிலாளர்கள் புகார்..!!

தனியார் குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் விசைத்தறி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் நாமக்கல் கலெக்டரிடம்  மனு கொடுத்தனர்..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தோக்கவாடி பகுதியிலுள்ள பெண்கள் சிலர் விசைத்தறி கூடத்தில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அந்த புகாரில் கூறப்பட்டதாவது, “தங்களது விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் செல்வம் என்பவர், விசைத்தறி கூட வளாகத்தில் வசித்துவருகின்ற பெண் தொழிலாளிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தும், தகாத வார்த்தைகளால் பேசியும் வருகின்றார். எனவே அவரிடமிருந்து எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். அப்பகுதியிலிருந்து தங்களது குடும்பங்கள் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பின்னர், இந்த மனுவை பெற்றுகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்தபுகார் தொடர்பாக திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பெண்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசைத்தறி உரிமையாளர் செல்வத்தை தொடர்பு கொள்ள முயற்சிசெய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டிருந்தது.

Categories

Tech |