Categories
தேனி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் ஊரை விட்டு அடித்து துரத்தப்பட்ட பெண்கள்…. டிக் டாக் விபரீதம்..!

தமிழகத்தில் இளம் பெண்ணையும் அவரது சகோதரியையும் கிராம மக்கள் நள்ளிரவில் அடித்து ஊரை விட்டு துரத்திய சம்பவத்திற்கு டிக்டாக் (Tik Tok) தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை  அடுத்த நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை சுகந்தி. இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர். கணவர் ராணுவத்தில்  வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி டிக் டாக்கில் முக்கல் முனங்கல் பாடல்களுக்கும் வீடியோ பதிவிட்டு  ஆண் நண்பர்களுடன் பொழுதை கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்  நண்பர்களுடன் போக்கு வருத்தமாக இருந்தார் இதனால் ஊர் மக்கள் சாந்தியை  திட்டித்தீர்த்தனர். இருப்பினும்  எதற்கும் அசராமல் பல வீடியோ பதிவிட்டு வந்தனர்.

அண்மையில் டிக் டாக் தொடர்பான எழுந்த புகாரில் இவர் காவல் நிலையத்திற்கே சென்று அங்கு வைத்து டிக் டாக்கில் சவால் விடுத்தார் சாந்தி.

இந்நிலையில் டிக்டாக்கில் சுகந்திக்கும்  இளைஞர் ஒருவருக்கும்  இடையே பிரச்சனை ஏற்பட்டது.இதில் அந்த  இளைஞர் சாந்தியோடு விடாமல் நாகலாபுரம் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேர்த்து விமர்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் டிக்டாக்கில் வலம் வந்த சுகந்தி மற்றும்  அவரது சகோதரியையும் ஊரைவிட்டுத் துரத்தி அடிக்க நள்ளிரவில் பொங்கி எழுந்தனர்.

மேலும் எக்காரணத்தை கொண்டும் ஊருக்குள் அவர்கள் இருவரும் வரக்கூடாது எனவும் ,டிஃடாக்கை   தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன்  காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Categories

Tech |