Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென ஆர்.பி உதயகுமார் பார்த்த வேலை…. விழுந்துவிழுந்து சிரிச்ச எடப்பாடி…! மேடை முழுவதும் செம கலகல …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆதிதிராவிடர்களுக்கு நாங்கள் பிச்சை போட்டு இருக்கோம் என  கேவலமாக சொல்லி திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேசுறாரு. இன்னைக்கு உயர் நீதிமன்றத்தில் அவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள் என்றால், ஜாதியை சொல்லி பின் தங்கியவர்கள் ரொம்ப கேவலமா பேசுறாரு.

ஆன்டிமுத்து  ராசா..  இன்னைக்கு ஒரு போட்டோ வந்திருக்கு…அவர் கல்யாணத்தப்ப எடுத்த போட்டோ. அந்த போட்டோவையும்,  இப்ப இருக்க ஆண்டிமுத்து ராசாவையும் பார்த்தா சம்பந்தமே இருக்காது. அவ்வளவு அழகாய் இருக்காருயா? அவரு என்ன சொல்றாரு ? இந்துக்கள் எல்லாம் வேசி மகன்களாம், ஜாதி கிடையாது, மதம் கிடையாது, இனம் கிடையாது. பணக்காரன்,  ஏழை என்ற வித்தியாசம் கிடையாது.

இங்கே உழைப்பவருக்கு பதவி. படிபடியாக வந்து,  கிளை கழக செயலாளராக வந்து,  முதலமைச்சராக முடியும்  என்றால் அதற்கு நம்முடைய எடப்பாடியார் சாட்சி. இது தொடக்கம்,  இன்னும் எத்தனை பேர் வரப் போகிறீர்கள். இங்கு அமர்ந்திருக்கிறார்கள் 3ஆவது தலைமுறை மக்கள். இங்கே அமர்ந்திருக்க யார் வேண்டுமானாலும் அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு வரலாம். திமுகவில் கலைஞர்,  அதுக்கப்புறம் அவரது பையன்,  இப்போது உதயநிதி,  அதுக்கப்புறம் இன்பநிதி வரப்போகிறார் என திமுக தலைமையை விமர்சித்தார்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீயை பேச அழைத்த போது, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர்,  இந்த மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைந்து வழிநடத்தி கொண்டு இருக்கின்ற அண்ணன் செல்லூர் ராஜீ அவர்கள், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருக்கு பூங்கோத்து கொடுத்து, தன்னுடைய வீர உரையும், சிரிப்பு உரையும் ஆற்றுவார்கள் என தெரிவித்தார். அப்போது விழா மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் மாற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தார்.

Categories

Tech |