கல் குவாரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வைராவி கிணறு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கல் குவாரியில் பாறைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மணிகண்டன் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்த அருகில் உள்ள சக தொழிலாளர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.