வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டுக் கிணற்றில் கூலித் தொழிலாளி தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது வீட்டில் 30 அடி ஆழமுள்ள தூர்ந்து போன கிணற்றை தூர்வாருவதற்கு, வடிவேல் என்பவர் தனது உதவியாளர்கள் இருவருடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது .
மேலும் எவ்வித பாதுகாப்புமின்றி ,இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு வடிவேலுவும் அவரது உதவியாளர் பரத்தும் கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது .
கிணற்றில் பாதி அளவு இறங்கும் போதே இருவரும் மயக்கமடைந்துள்ளனர் .அதில் வடிவேலு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் மற்றும் பரத் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார் .