தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் என பெண் தொழிலார்கள் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் ஆடை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் 450-க்கும் அதிகமான பெண் தொழிலார்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணத்தினால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிலார்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தில் பிடித்தம் போக மீதி வழங்கி வருவதாக அங்கே வேலை பார்ப்பவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகின்ற பெண் தொழிலாளிகளுக்கு சம்பளத்தை அதிகப் படுத்துவது இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் பெண் தொழிலாளிகள் திடீரென பணியை நிறுத்திவிட்டு தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து அதன் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் பெண் தொழிலார்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க செய்கிறோம் என காவல்துறையினர் பெண் தொழிலாளிகளிடம் கூறியுள்ளனர்.