பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் தயாராகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவில் அவதார் 2 திரைப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் வழக்கத்தை விட அதிக அளவில் பங்கு கேட்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை ரிலீஸ் செய்வதில்லை என்று கூறினார்கள்.
இந்நிலையில் தமிழகத்திலும் தற்போது அவதார் 2 திரைப்பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அவதார் 2 படத்தை விநியோகிக்கும் நிறுவனம் திரையரங்குகளிடம் அதிக அளவு பங்குத்தொகை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிக பங்குத்தொகையை கொடுப்பதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். மேலும் இதனால் தான் அவதார் 2 திரைப்பட ரிலீஸ் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது