Categories
பல்சுவை

உலகமே சரிந்தது…. சரிவுடன் நிறைவடைந்த பங்கு சந்தைகள்…..!!

இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகள் இன்று தொடர் சரிவுடனே வர்த்தகமாகி நிறைவடைந்தன.

உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலை தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் பிரதிபலித்து வருகின்றது. அந்த வகையில் இந்திய பங்குசந்தை மட்டுமில்லாமல் உலகளவில் உள்ள அனைத்து பங்கு சந்தையும் இன்று சரிவுடனே நிறைவடைந்தது. இந்தியளவில் உள்ள மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 39,087 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் 503 புள்ளிகள் குறைந்து, 38,593 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 11,440 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி 148 புள்ளிகள் குறைந்து, 11, 440 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்திய பங்குசந்தை மட்டுமல்லாமல் உலக பங்கு சந்தைகளும் சரிவுடனே வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக் ( Nasdaq )  7,  993 புள்ளிகளுடனும்,

லண்டன் பங்கு சந்தை குறியீடான (FTSE) 7 , 225 புள்ளிகளுடனும்,

பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான (CAC) 5, 547 புள்ளிகளுடனும்,

ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான (DAX), 12, 173 புள்ளிகளுடனும்,

ஜப்பான் பங்கு சந்தை குறியீடான (NIKKEI), 22,020 புள்ளிகளுடனும்,

ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான (HANG SENG), 25, 945 புள்ளிகளுடனும்,

சீன பங்கு சந்தை குறியீடான (Shaz), 2,955 புள்ளிகளுடன் வர்த்தகம்  நிறைவடைந்தது.

Categories

Tech |