கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிக்க குறைந்தது ஓராண்டு ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது .
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. நாள்தோறும் இந்த கொடிய வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்து வருகின்றது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. ஆனால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை..
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஆரிப் கூறியதாவது, கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் சோதனை பல நாடுகளில் ஆய்வு கட்டத்திலேயே இருக்கிறது.
இதனால் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகலாம். உலகளவில் கொரோனா வைரஸ் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெயினில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இங்கிலாந்து, துருக்கியில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருகின்றது” என்று கூறினார்.