உலக பணக்கார நாயான குந்தர் ரூ.238 கோடிக்கு ( 32 மில்லியன் டாலருக்கு ) தனது வீட்டை விற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக பணக்கார நாயான குந்தர் 500 மில்லியன் டாலர் சொத்துக்களை தனது தாத்தா நான்காம் குந்தரிடமிருந்து பெற்றுக்கொண்டது. எனவே குந்தர் உலக பணக்கார நாய் என்று தற்போது அழைக்கப்படுகிறது. அதாவது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கர்லோட்லா லெய்பென்ஸ்டன் என்பவர் 1992-ஆம் ஆண்டில் 58 மில்லியன் டாலர் சொத்தை தனது நாய்க்கு பரிசாக வழங்கியுள்ளார். பிறகு அந்த நாயுடைய வாரிசுகள் பணக்கார நாய்களாக வாழ்ந்து வருகிறது. மேலும் தனி குழு ஒன்று நாயின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக உள்ளது.
இந்த நிலையில் உலக பணக்கார நாயான குந்தர் சுமார் 32 மில்லியன் டாலருக்கு அமெரிக்காவின் மியாமியில் உள்ள தனது பெரிய வீட்டை விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 1928-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு எட்டு பாத்ரூம், ஒன்பது படுக்கை அறைகள், ஒரு நீச்சல் குளம் என வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடற்கரையை நோக்கியுள்ள இந்த வீட்டை 2000-ஆம் ஆண்டில் மடோனா என்பவர் 7.5 மில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.