ராணுவ உறுப்பினரின் ஒழுங்கற்ற செயல் குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீருடையில் இருந்த ஒரு ராணுவ உறுப்பினர் மற்றும் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட ஒழுங்கற்ற சம்பவம் நிகழ்ந்த காணொளி ஒன்று சமூக ஊடங்களில் பரவுவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒழுங்கற்ற இந்த படையினரின் இத்தகைய செயல்களை மன்னிக்க முடியாது என்று ராணுவம் கூறியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது. எனவே மேலும் விசாரணை செய்து அதன் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.