அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காக உணவகம் ஒன்றில் செய்த மோசமான செயல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Rhode Island என்ற பகுதியில் வசித்து வரும் Jumanne Way என்ற இளைஞர் தான் எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஸ்க் எடுத்து பல செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் அமெரிக்க உணவகம் ஒன்றில் அந்த இளைஞர் செய்த மோசமான செயலையும் இணையத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதாவது அந்த வீடியோவில் கழிவறை கோப்பை ஒன்றின் மீது சாண்ட்விச் முதலான உணவுப் பொருட்களுள் இருக்கும் காய்கறிகள் மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றை பரப்பி வைத்துள்ளார். இதையடுத்து உணவு பொருள்கள் உள்ள பாத்திரங்களை வரிசையாக அடுக்கி வைத்த பின்னர் அதன் மீது கால் வைத்து மிதித்துள்ளார். அதன் பிறகு மீண்டும் எடுத்த இடத்திலேயே அந்த உணவு பொருட்களை அடுக்கி வைத்துள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் பன், உணவு பொருள்கள் உள்ளிட்டவற்றை கீழே கொட்டிவிட்டு மீண்டும் இருந்த இடத்திலேயே எடுத்து வைப்பது, ஜூஸ் பாடல்கள் உள்ளிட்டவற்றை திறந்து குடித்து விட்டு மீண்டும் ஃப்ரிட்ஜில் வைப்பது போன்ற மோசமான செயல்களைச் செய்து வீடியோவாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த மோசமான செயலால் தனக்கு தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை நான் எடுக்கும் வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு அதனால் கிடைக்கும் பணம் தான் எனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானதையடுத்து உணவகத்தில் இருந்து அந்த இளைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.