இளம் இயக்குனர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது நிகழ்வு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ‘தாதா87’ என்ற படத்தை இளம் இயக்குனர் கலைச்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலைச்செல்வன் மறைவிற்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.