Categories
உலக செய்திகள்

கொரோனா பற்றி வீடியோ வெளியிட்ட இளம் பத்திரிகையாளர் மாயம்.!!

சீனாவில் கொரோனா வைரசின் தாக்குதலை  உலகுக்கு அம்பலப்படுத்தி வந்த இளம் பத்திரிகையாளர் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் ஊகான் நகரில் இருந்து தான் முதலில் பரவத் தொடங்கியது. இதனால் சீனாவில் இருந்து ஊகான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Image result for Chen Qiushi

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அந்த நகருக்கு சென்ற சென் கியுசி (Chen Qiushi) என்ற பத்திரிகையாளர், பிணவறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் நிலவும் அவலங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இவர் இணையத்தில் பதிவேற்றி வந்தது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Image result for Chen Qiushi

இந்த நிலையில் கடந்த 6-ஆம் தேதி முதல் பத்திரிகையாளர் சென் கியுசியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது தாயும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் போலீசார்  கைது செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அதே சமயம், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் எது உண்மை என்பது தெளிவாக தெரியாமல் புதிராகவே இருந்து வருகிறது.

Categories

Tech |