ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளிச்சென்ற இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஒச்சதேவன்கோட்டையில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனி என்ற 21 இளைஞரிடம் குடுத்து காணிக்கூரில் உள்ள ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள சொல்லிவிட்டு முனீஸ்வரன் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கமுதி போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பிரசன்னா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை பார்த்த மணல் அள்ளி கொண்டிருந்த இளைஞன் உடனடியாக டிராக்டருடன் தப்பிக்க முயன்றுள்ளான். இதனைத்தொடர்ந்து போலீசார் அவனை விரட்டி பிடித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் முனியை கைது செய்து டிராக்டருடன் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் கோவிலாங்குளம் போலீசார் கைது செய்ய முனி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.