Categories
தேசிய செய்திகள்

சாமி…! எங்களை காப்பாத்து…. நாக்கை வெட்டி படையல்…. இளைஞரின் விபரீத முடிவு …!!

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால்  வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப பணிகளில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களில் ஒருவரான விவேக் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமை அன்று சக நண்பரிடம் சந்தைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு அங்கிருக்கும் நாதேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார் விவேக்.

கோவிலுக்கு பூசாரி வந்தபொழுது கோவிலில் விவேக் நாக்கு அறுபட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக பூசாரி தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் விவேக்கை மருத்துவமனையில் அனுமதித்ததோடு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் இந்தியாவில் கொரோனா  வைரஸ் பரவுவதைத் தடுக்க விவேக் தனது நாக்கை அம்மனுக்கு காணிக்கையாக கொடுக்க வேண்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. கொரோனா  பரவலை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாகக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |