ஒடிசாவில் இளைஞன் ஒருவனை காட்டு யானை ஒன்று விரட்டி ஓட விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்திற்கு அருகில் உள்ள குக்கிராமம் ஒன்றில் விலை நிலத்திற்குள் புகுந்த காட்டு யானையை அங்கிருந்த கிராமத்தினர் விரட்டி அடித்தனர். பின் கிராம மக்களின் சத்தத்தினால் மிரண்ட காட்டு யானை அங்கிருந்து மெதுவாக சென்றது. இவ்வாறு இருக்கையில் இளைஞன் ஒருவன் தான் வைத்திருந்த குச்சியால் யானையை துரத்தி சென்று அடித்து விரட்டினான்.
இதனால் கோபமடைந்த யானை எட்டி மிதிக்க முயன்றதோடு பின்னால் திரும்பி அந்த இளைஞனை ஓட ஓட விரட்டி அடித்தது. யானையின் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞன் அங்கிருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தான். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக யானைகள் ஊருக்குள் வந்தால் தங்களிடம் தகவல் தெரிவிக்குமாறும் மக்கள் தாங்களாகவே யானையை விரட்ட நினைத்தால் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்றும் ஒடிசா வனத்துறையினர் எச்சரித்தனர்.