Categories
உலக செய்திகள்

இப்படி பண்ணுவானு நினைக்கல..! காதலியை நம்பி மோசம் போன இளைஞர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

சுவிட்சர்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை நம்பி பிட்காயின் மோசடியில் சிக்கி பெருந்தொகையை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் வசித்து வந்த தாரியோ (34) என்பவர் தாரா என்ற பெண்ணுடன் இணையத்தில் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாற இருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினர். இந்த நிலையில் பிட்காயின் உள்ளிட்ட Cryptocurrency வர்த்தகத்தில் தாராவுக்கு ஈடுபாடு இருந்த காரணத்தினால் முதலீடுகள் குறித்த நல்ல பயனுள்ள கருத்துக்களை தாரியோவுக்கு தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து தாரா பிட்காயின் முதலீடு செய்ய தாரியோவை தூண்டியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் 500 பிராங்குகளுக்கு மட்டும் ஆரம்பத்தில் முதலீடு செய்தால் போதும் என்று தாரா கூறியுள்ளார். இதனை நம்பிய தாரியோ பிட்காயினில் அதிக முதலீட்டினை செய்துள்ளார். இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்க தொடங்கியதால் மேலும் பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்று தாரா கட்டாயப்படுத்தியுள்ளார். அதேசமயம் தாரியோ பிட்காயின் முதலீட்டிற்கு உதவும் வகையில் கணினிக்கான கட்டுப்பாட்டினை தாராவிடம் வழங்கியிருந்தார். ஆனால் தாரியோவின் கைக்கு வருவாய் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாரியோ தன்னிடம் இதற்கு மேல் முதலீடு செய்ய பணம் இல்லை, மொத்த சேமிப்பு பணமும் பிட்காயின் வாங்கவே செலவு ஆகிவிட்டது என்று தாராவிடம் கூறியுள்ளார். அதன் பிறகு தாரியோவை தொடர்பு கொள்ள மறுத்துள்ளார் தாரா. மேலும் முதலீட்டுக்காக கண்காணித்து வரப்பட்ட இணைய பக்கமும் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த தாரியோ தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து மன வருத்தம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பெர்ன் மாநில காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |