தென்காசி மாவட்டத்தில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார் 50 லிட்டர் கள்-ஐ பறிமுதல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாலாம் கட்டளையில் அனுமதியின்றி கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த செபஸ்தியான் என்பவருடைய மகன் ராபர்ட்(25) கள் விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த 50 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து ராபர்டையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.