மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென பலத்தமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தியாகராஜன் வீட்டில் இருந்த யு.பி.எஸ் பேட்டரி மூலம் மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அந்த சமயம் பார்த்து மின்சாரம் வந்ததினால் எதிர்பாரதவிதமாக தியாகராஜன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக இளைஞனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தியாகராஜன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற நல்லிபளையம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.