தேனி மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் நெருங்கி பழகி ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 20 வயதுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி சதீஷின் வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து சதீஷ் பெற்றோரின் தூண்டுதலின் படி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து விலக தொடங்கியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் கேட்டபோதும் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனால் அந்த பெண் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரதிகலா விசாரணை செய்து சதீஷ் அவரது தந்தை உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்துள்ளனர்.