Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்கச்சி கழுத்துல தாலிய கட்டு… அடித்து மிரட்டி செய்ய வைத்த அண்ணன்கள்… மனமுடைந்து இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!!

தங்கையை விவகாரத்து செய்த இளைஞரை அண்ணன்கள் கடத்திச் சென்று தாக்கி மீண்டும் தாலி கட்ட வைத்ததால் விரக்தியில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரித்திவிராஜ்.. 34 வயதுடைய இவர் அம்பத்தூர், பாடியிலுள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு சத்யா என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணமானது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பிரித்திவிராஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தார். இந்த சூழலில் பிரித்தி விராஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்ற முதல் மனைவி சத்யாவின் அண்ணன்களான தாமு மற்றும் இளையராஜா ஆகியோர் மாமல்லபுரத்திற்கு கடத்திச் சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்து, தன்னுடைய தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என அவரை அடித்து உதைத்தனர். மேலும் தங்கை சத்யாவுடன் அவருக்கு மீண்டும் கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்தனர்.

கட்டாய திருமணம் செய்ததால் விரக்தியடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடி வந்து தன்னுடைய வீட்டிவாசலில் நின்றபடி திடீரென தனது உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.. உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் அலறினார்.. இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.. அவரளித்த மரண வாக்குமூலத்தில், தனது மரணத்திற்கு காரணம் சத்யா மற்றும் அவரது சகோதரர்கள் தான் என கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |