கனடாவில் ஸ்கேன் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் போதைப் பொருளால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் போதை பொருள் பயன்படுத்திய ஜோர்டான் ஷீர்ட் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போதைப் பொருள் எதையாவது மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அறிவதற்காக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் ஸ்கேனில் அவர் அப்படி எதையும் மறைத்து வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட ஜோர்டான் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் வெளிவந்த தகவலை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அவரது குடலுக்குள் பிளாஸ்டிக் கவர் ஒன்றில் போதைப் பொருள் இருந்துள்ளது. அந்த கவர் கிழிந்து போதைப் பொருள் அளவுக்கு அதிகமாக இரத்தத்தில் கலந்ததால் அவர் இறந்துள்ளார்.
எனவே இதுகுறித்து ஜோர்டான் தாய் கூறியதாவது, ஸ்கேன் செய்து தானே என் மகனை சிறையில் அடைத்தீர்கள். அதன் பின் அவனது உடலில் எப்படி போதைப்பொருள் கலந்திருக்கக்கூடும். அப்போது ஸ்கேனில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தமா? இல்லை, எனது மகனுடைய மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆகையால் தாயார் எழுப்பியுள்ள கேள்வியின் அடிப்படையில் விசாரணை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.