நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றை கடக்க முயன்ற கட்டிட தொழிலாளி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜோடார்பாளையம் பகுதியில் கவின்குமார்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் சரளைமேடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி(37) என்பவரும் இணைந்து வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் பகுதியில் வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றை நீந்தி அக்கரைக்கு செல்வது வழக்கம். இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி வழக்கம்போல இருவரும் ஆற்றை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது பாலசுப்பிரமணியம் நீந்தி எதிர்கரைக்கு சென்ற நிலையில் பின்னல் வந்த கவின்குமார் திடீரென மயமாகியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம் உடனடியாக காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினரின் உதவியுடன் ஆற்றில் மாயமான கவினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2 நாட்களாக கவின் கிடைக்காத நிலையில் நேற்று பரமத்திவேலூர் பகுதியில் உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் மிதப்பதாக ஜோடர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்று பார்த்தபோது அந்த நபர் மாயமான கவின்குமார் என்று உறுதிசெய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு உடற்கூராவிற்காக பரமத்திவேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கவின்குமாரின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.