Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே என்ன ஒரு கொடூரம்..! பெற்ற பிள்ளையை அடித்தே கொன்ற தாய்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள ஜாக்ஸ்டேல் எனும் மெயின் ரோட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அன்று அங்குள்ள வீடு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் 3 வயது சிறுவனை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான்.

இந்நிலையில் காவல்துறையினர் அந்த மூன்று வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமாக இருந்த சிறுவனின் தாய் லீலா பிக்கரை (22) கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் தனது மகனை லீலா பிக்கர் உயிர் போகும் அளவிற்கு அடித்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |