Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புதிய பைக்… வாலிபர் பரிதாப பலி…!!

வேதாரண்யம் பகுதியில் புதிய பைக் வாங்கி வந்த இளைஞர் எதிரே வந்த பைக் மீது மோதியதில்  சம்பவ இடத்திலேயே பலியானார்.

நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் வீரப்பன். அவருடைய  மகன் சிவதாஸ் வயது 22 .  இவர் புதிய பைக் வாங்கி அண்டர்காடு சாலை வழியாக வேதாரண்யத்திற்கு ஒட்டிச் சென்றார். அப்போது எதிரே விஜயராகவனும் , ஞானவிக்னேசும் ஓட்டி வந்த பைக்  சிவதாஸ் மீது எதிர்பாரத விதமாக வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Image result for பைக் மீது பைக் மோதி விபத்து

இந்த விபத்தில் எதிரே வந்த இருவர் பலத்த காயமடைந்தனர்.  காயமடைந்தவர்களை மீட்டு  சிகிக்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை அடுத்து சிவதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் பற்றி தகவல் கிடைத்த சிவதாசின்  உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே விரைந்து வந்த போலீஸ் அதிகாரி  டி .எஸ் .பி ஸ்ரீகாந்த் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய  பிறகு போராட்டத்தை  கைவிட்டனர்.

Categories

Tech |