மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் நாகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான பாம்பு பிடி வீரர் ஆவார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாம்பை பிடித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பாம்பை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பாம்பின் வாயில் நாகேஷ் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது பாம்பு நாகேஷின் உதட்டில் கடித்து விட்டது.
இதனால் நாகேஷ் மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக நாகேஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீப காலமாகவே பாம்பு படிப்பவர்கள் பாம்புக்கு முத்தம் கொடுப்பது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பாம்புக்கு விளையாட்டாக முத்தம் கொடுக்க அது தங்களுக்கே வினையாகி கடைசியில் உயிரே போய்விடுகிறது. மேலும் விஷ ஜந்துகளுடன் விளையாடும்போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு நாகேஷின் மரணம் ஒரு நல்ல உதாரணமாகும்.