வாலாஜாப்பேட்டையில் மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் படுகாயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வெங்கடேசன் என்ற இளைஞன் ஒருவன் பாழடைந்த கழிவறை கட்டுமானம் ஒன்றின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்றவைத்து பிடித்துவிட்டு தீக்குச்சியை அருகில் இருந்த குப்பையில் தூக்கி போட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து குப்பை எரிந்து கொண்டிருந்தநிலையில் அதிலிருந்த மர்மப்பொருள் ஓன்று திடீரென வெடித்ததில் வெங்கடேசன் படுகாயமடைந்தார். அதன்பின் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.