கடகம் ராசி நேயர்கள்!! இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகளை நீங்கள் பெறலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும் பணியாளர்கள் பணிச்சுமை கூடும். குறைந்த அளவில் பணம் கிடைக்கும். உறவினர் வருகை வீட்டில் மகிழ்ச்சி கொடுக்கும். இன்று சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது .மருத்துவம் சார்ந்த செலவுகள் இன்று இருக்கும் .அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
இன்று கணவன் மனைவி உறவு நன்றாகவே இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மற்றவரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வெளியூர் செல்வதாக இருந்தாலும் உடம்பின் மீது ரொம்ப கவனமாக இருங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று ஆதரவு உங்களுக்கு ரொம்ப சிறப்பாக இருக்கும். சமூக அந்தஸ்து இன்று கூடும். சமூகத்திற்காக நீங்கள் அக்கறை கொண்டு காரியங்களைச் செய்வதால் புகழையும் பாராட்டுக்களையும் நீங்கள் பெறுவீர்கள்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை நல்ல முன்னேற்றம் இருக்கும் . கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் மேல் கேள்விகளாக முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் எப்பொழுதும் போலவே உற்சாகமாகவே காணப்படுவார்கள். இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் செய்யும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும் .
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் பச்சை நிறம்