Categories
மாநில செய்திகள்

ஒன்றரை கிலோ தங்கம் கடத்தல்… சோதனையில் சிக்கிய நபர்…!!

விமானம் மூலம் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட பொழுது ஒரு நபர் ஒன்றரை கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வர வேண்டும் என்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் பிரத்யேக அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன. துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த விமான பயணிகள் கொண்டு வந்த உடமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்பொழுது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 35 வயது நபரின் உடமைகளில் 10 தங்க கட்டிகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதன் மொத்த எடை 1 1/2 கிலோவாகும். அதன் மதிப்பு ரூ. 78.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள் அதனை கடத்தி வந்த நபரை கைது செய்தனர்.

Categories

Tech |