‘வலிமை’ படத்தை வாங்க கடும் போட்டி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கிய நிலையில், தற்போது இதனை மாவட்ட வாரியாக விற்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே, செங்கல்பட்டு ஏரியாவில் இந்த படம் பிரமாண்ட விலைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மற்ற இடங்களிலும் இந்த படத்தை வாங்க கடும் போட்டி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.