தமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில் பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், திரையரங்குகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசிடமிருந்து திரையரங்கு திறப்பது குறித்து முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.