Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென ரசிகர்களை சந்தித்த தளபதி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!

தளபதி விஜய் திடீரென தனது ரசிகர்களை நேரில் சந்தித்திருக்கிறார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை அருகே பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை செயலகத்திற்கு சென்றுள்ளார் .

விஜய்

அங்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருந்த நிலையில் திடீரென நடிகர் விஜய் வருகை தந்திருக்கிறார் . தளபதியின் திடீர் வருகை எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர் . தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |