மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட மின் தடைக்கு சீன சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டின் வணிக வர்த்தக நிதி தலைநகரான மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பம்பாய் பங்குச் சந்தை ,தேசிய பங்குச் சந்தை, பாபா அணு ஆராய்ச்சி மையம், தேசிய ரசாயன நிறுவனம் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பன்னாட்டு கம்பெனிகளின் தலைமையகம் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இயங்கபட்டுவருகிறது. எனவே மின் தடை என்பதை மும்பையில் கிடையாது. அவ்வப்போது ஏதேனும் காரணங்களால் மின்தடை ஏற்பட்டால் அது அப்போது உடனடியாக சரி செய்யப்படும்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் நகர்புறங்களில் சுமார் 12 மணி நேரம் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும் மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனைக் குறித்து மாநில மின்சார துறை அமைச்சர் நிதின் ராவத் சீனாவின் சைபர் தாக்குதல் காரணமாக மும்பையில் மின்தடை ஏற்பட்டு இருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது .
இந்த மின்தடையால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் குறித்து விசாரிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்டிரா சைபர் பிரிவு துறையின் அதிகாரிகள் இது குறித்து அறிக்கையை வெளியிட்டனர்.மும்பையில் மின் தடைக்கு சீனா சைபர் தான் காரணம் எனவும் மால்வோர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.