ஆஸ்திரேலியாவில் கடந்த 3 நாட்களாக எரியும் புதர் தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 100க்கும் மேலான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் மார்க்கரெட் ரிவர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக சுமார் 6,000 ஹெக்டர் பரப்பளவில் புதர் தீ எரிந்து வருகிறது.
இந்த புதர் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 3 நாட்களாக பற்றி எரியும் தீயினை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 100 க்கும் மேலான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
இருப்பினும் கட்டுக்குள் வராத தீ தற்போது அந்நாட்டில் நிலவும் குளிரான சூழ்நிலையின் காரணத்தால் சற்று தணிந்துள்ளது.