லா பால்மா தீவில் எரிமலையில் இருந்து வெளிவரும் தீக்குழம்பானது கடலில் கலந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள வடமேற்கு ஆப்பிரிக்க கரையோரங்களில் கேனரி தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவில் லா பால்மா எரிமலை உள்ளது. மேலும் இந்த தீவில் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 19 ஆம் தேதி அன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து லா பால்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. மேலும் எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட கரும்புகை விண்ணை முட்டும் அளவிற்கு பரவியது. இதனை அடுத்து எரிமலையிலிருந்து தீ குழம்பு வெளியேற தொடங்கியுள்ளது.
குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக லா பால்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதனை அடுத்து லா பால்மா எரிமலையிலிருந்து வெளிவரும் தீ குழம்பானது அட்லாண்டிக் கடலில் கலந்தால் ஆபத்து நிறைந்த வாயுக்கள் வெளிவரலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று லா பால்மா எரிமலையிலிருந்து வெளியான தீக்குழம்பு அட்லாண்டிக் கடலில் நேற்று கலந்துள்ளன. குறிப்பாக கேனரி தீவுகள் அமையப்பெற்றுள்ள டிஜார்பே எனப்படும் கடற்கரைப் பகுதியில் கலந்துள்ளதால் அப்பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் ஆபத்தான வாயுக்கள் வெளிவரும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவர்கள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எரிமலை வெடிப்பிற்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அங்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனை அடுத்து 500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6000 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.