நின்று கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உம் அல் குவைனில் அல் ரபா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இதில் வெளிநாட்டு கப்பல்கள், மீன்பிடி கப்பல்கள், படகுகள் ஆகியவை வந்து நிற்கும் தளமாக உள்ளது. இதனையடுத்து மீன்பிடி மற்றும் சரக்கு ஏற்றிச் செல்வதற்காக அந்தத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று மதியம் கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட ஊழியர்கள் பதறிப்போய் தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனால் அதற்குள் தீ அனைத்து இடங்களிலும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர் . ஆனால் தீ கொழுந்து விட்டு வேகமாக அனைத்து இடங்களிலும் பரவத் தொடங்கியது. மேலும் தீயை அணைக்க மற்றொரு பகுதியிலிருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ராசல் கைமா பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த இருதரப்பு தீயணைப்பு வீரர்களும் பல மணி நேரம் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி இறுதியில் அணைத்தனர். இதற்கிடையில் கப்பலின் பாதிக்கும் அதிகமான பாகங்கள் எரிந்து தீயில் கருகியது. இந்தத் தீ விபத்தினால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளித்தது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை. அதிலும் குறிப்பாக போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.