சுரங்கப்பாதையின் வெளியில் நின்று கொண்டிருந்த லாரி தீடிரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள யூரி மாநிலத்தின் வாஸன் பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்கப் பாதையின் அருகில் நின்றுக்கொண்டிருந்த லாரி தீடிரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தகவலை அறிந்த போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர்களோடு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் எந்த வித உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் சுரங்கப்பாதைக்கு வெளியே இந்த விபத்தானது ஏற்பட்டதினால் எந்த சேதமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை மூடப்பட்டதால் வாகனங்கள் கோச்செனேன் பகுதிக்கு செல்ல முடியாமல் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் 50 நிமிடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.