ஒத்திகை நிகழ்ச்சியின் போது தீயணைப்பு வீரர் மீது தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பேரிடரின் போது இன்னல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பருவமழையின் போது உணவு மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து மழை காலங்களில் கால்நடைகளை மேடான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து ஒத்திகை செய்து காண்பித்துள்ளனர். இந்நிலையில் ஒத்திகையின் போது தீயணைப்பு வீரரான நகைமுகன் என்பவர் மீது தீ பற்ற வைத்துள்ளனர். அதன் பின் சக வீரர்கள் தீயை அணைக்கின்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக நகைமுகன் மீது அதிக அளவிலான தீப்பற்றி எரிந்ததால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நகைமுகன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். இவ்வாறு ஒத்திகை நிகழ்ச்சியின்போது தீயணைப்பு வீரர் மீது தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.