தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பலிலிருந்து 51 பணியாளர்களை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டுள்ளனர்.
இத்தாலியிலிருந்து கிளம்பிய சொகுசு கப்பல் கிரீஸில் உள்ள Corfu தீவிற்கு மார்ச் 1ஆம் தேதி வந்தது. சென்ற 2 வாரங்களாகவே அந்த கப்பல் Corfu தீவில் தான் நிறுத்தப்பட்டிருந்தது. 51 பணியாளர்கள் கப்பலுக்குள் இருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று அந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 51 பணியாளர்களையும் மீட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த திடீர் தீவிபத்தில் கப்பலின் ஒரு பகுதி தீக்கிரையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பணியாளர்கள் உடனடியாக காப்பாற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
https://youtu.be/FbzAWwGmOTY