சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் தீரன் சின்னமலையின் சிலைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, ஜெயக்குமார், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடான் நிலையில் உள்ள தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊரடங்கு அமலில் இருப்பதால் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு தலா ஐந்து பேர் வீதம் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்த வழங்கப்பட்டுள்ளது.